லாலு இதை செய்திருக்க கூடாது: மைத்துனர் சுபாஷ் குற்றச்சாட்டு

பாட்னா: லாலு இதை செய்திருக்க கூடாது, முதலில் விசாரணை செய்திருக்க வேண்டும் என்று அவரது மைத்துனர் சுபாஷ் யாதவ் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீஹார் முன்னாள் முதல்வருமான லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தனது தோழியை 12 ஆண்டுகளாக காதலிப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு வைரல் ஆன நிலையில், மறுநாள் லாலு, ஒழுக்கமற்ற நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டி,தேஜ் பிரதாபை கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் நீக்குவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அவரது மருமகள் ஐஸ்வர்யா, லாலுவின் செயல் ஒரு தேர்தல் நாடகம் என்று குற்றம்சாட்டியிருந்தார். தற்போது லாலுவின் மைத்துனர் சுபாஷ், லாலு இதை செய்திருக்க கூடாது. முதலில் விசாரணை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுபாஷ் அளித்த பேட்டி:
லாலு இதை செய்திருக்க கூடாது. முதலில் விசாரணை செய்திருக்க வேண்டும்.தேஜ் பிரதாப் மற்றும் அவரது தோழி பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள்.
லாலு அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் தேஜ் பிரதாப் மற்றும் அந்தப் பெண் இருவரும் தான் பொது மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டியவர்கள். பீஹார் மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு சுபாஷ் தெரிவித்தார்.
மேலும்
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
-
தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு
-
சிதம்பரம் அருகே கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்
-
பல்கலைகழக நிர்வாக அலுவலகம் முற்றுகை: தனி அதிகாரிகள் கைது