அம்பத்துார் மண்டல ஆபீஸ் வளாகத்தில் கார் தீக்கிரை

அம்பத்துார் :அம்பத்துார் மண்டல வருவாய் பிரிவில் பணியாற்றும், உதவி வருவாய் அலுவலர்கள் பயன்படுத்தும் 'டாடா இண்டிகா' கார், மண்டல வளாகத்திற்குள் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில், நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்தது.

நேற்று அதிகாலை 1:45 மணியளவில், காரில் இருந்து கரும்புகை வெளியேறி, திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. காவலாளி முருகன், 50, தகவல் தெரிவிக்க, அம்பத்துார் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். அதற்குள், காரின் முன் மற்றும் உட்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். தடய அறிவியல் துறை அதிகாரிகள் உதவியுடன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement