தர்மராஜா கோவிலில் தீமிதி திருவிழா
போரூர், போரூர், ஷேக்மாணியத்தில் தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பூ குழி இறங்கும் திருவிழா, வரும் ஜுன் 1ம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு, 16ம் தேதி, கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அடுத்த நாள் கூழ் வார்த்தல் நடந்தது.
கடந்த, 22ம் தேதி கணபதி பூஜை நடத்தப்பட்டு, அம்மனுக்கு வாடை பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.
அடுத்த நாள் பாரத கொடியேற்றுதல், காப்பு கட்டுதல்; 24ம் தேதி முதல் தினமும் அபிஷேகம், அன்னதானம், சொற்பொழிவு நிகழ்ந்தது.
இன்று காலை 9:00 மணிக்கு அர்ச்சுணன், திரவுபதி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மதியம் பாஞ்சாலி துகிலும், பரந்தாமன் அருளும் சொற்பொழிவு நடக்கிறது.
வரும், 30ம் தேதி அர்ச்சுணன் தபசு மரம் ஏறுதல் நிகழ்வு நடக்கிறது. அதைத்தொடர்ந்து, காரம்பாக்கம் ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, சக்தி கிரகம் எடுக்கப்படுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் வரும் ஜூன் 1 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு மஹிஷாசுரமர்த்தினி, 32 திருக்கரங்களுடன் கூடிய அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
***
மேலும்
-
தெரு நாய்க்கு கருத்தடை செய்ய 200 டாக்டர்கள் அவசர நியமனம்
-
கொரோனா தொற்றுக்கு சென்னையில் ஜோசியர் பலி தமிழகம் முழுதும் 69 பேர் பாதிப்பு
-
அ.தி.மு.க., வெற்றி எதிர்த்த வழக்கு தள்ளுபடி
-
மின் கட்டண உயர்வை கைவிட குறுந்தொழில் சங்கம் கடிதம்
-
கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்
-
லட்சம் பெண்களை தொழில் அதிபராக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க திட்டம்