'பி.டி.எம்., லே - அவுட்டில் ரவுடிகள் தொல்லை அதிகரிப்பு'
பெங்களூரு : பி.டி.எம்., லே - அவுட்டில், ரவுடி ஒருவர் கடைக்குள் நுழைந்து தகராறு செய்து, அங்கிருந்தவரை தாக்கியுள்ளார். இந்த வீடியோவை ம.ஜ.த., வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, 'எக்ஸ்' வலைதளத்தில் ம.ஜ.த., வெளியிட்டுள்ள வீடியோ:
பி.டி.எம்., லே - அவுட்டில், ரவுடிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் தொகுதியான இங்கு, சில நாட்களுக்கு முன், ரவுடி ஒருவர் கடைக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். அங்கிருந்தவரை தாக்கியுள்ளார். கல் வீச்சு நடத்தி உள்ளார்.
கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் கூடி வாழும் அமைதி பூங்காவான கர்நாடகாவில், ரவுடி கோத்வால் சீடர்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். பி.டி.எம்., லே - அவுட்டில், குட்டி ரவுடிகளின் அட்டகாசம் எல்லை மீறியுள்ளது.
ரவுடிகள், போக்கிரிகளுக்கு சட்டம் மற்றும் போலீசாரை பற்றிய பயம் இல்லை. பெங்களூரு மட்டுமின்றி, கர்நாடகா முழுதும் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.
பொது மக்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. பயம், பதற்றத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆரோவில்லில் வளர்ச்சி திட்டங்கள் ஆய்வு
-
ரயிலில் முதியவர் தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு
-
அப்போலோ சிறப்பு நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
-
அடரி ஏரியில் மணல் கடத்திய 7 பேர் கைது
-
த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ் சமூக ஊடகப் பேரவை கூட்டத்தில் பரபரப்பு