திருவொற்றியூரில் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 360 ஆக உயர்கிறது?
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தின் 14 வார்டுகள் மற்றும் மணலி மண்டலத்தின் 18, 20, 21, 22 ஆகிய நான்கு வார்டுகளும் சேர்த்து, 18 வார்டுகளில் 3.06 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களும், 311 ஓட்டுச் சாவடிகளும் திருவொற்றியூர் தொகுதியில் உள்ளன.
இந்நிலையில், 1,200 ஓட்டுகளுக்கு மேல் உள்ள ஓட்டுச் சாவடியை இரண்டாக பிரிப்பது குறித்த கலந்தாலோசனை கூட்டம், நேற்று முன்தினம், திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் விஜய்பாபு தலைமையில் நடந்தது. இதில், தி.மு.க., -- அ.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதன்படி, 311 ஓட்டுச் சாவடிகள் உள்ள திருவொற்றியூர் தொகுதியில், 49 ல், 1,200 க்கும் அதிகமான ஓட்டுகள் உள்ளன. அவற்றை இரண்டாக பிரித்து, கூடுதலாக, 49 ஓட்டுச் சாவடிகள் உருவாக்கப்படும் பட்சத்தில், எண்ணிக்கை, 360 ஆக உயரக்கூடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் கூறுகையில், ''திருவொற்றியூர் தொகுதியில் மட்டும், 55,000க்கும் அதிகமான ஓட்டுகள் மாயமாகி விட்டன. கடந்த தேர்தலின்போது, அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டு, முடிவை மாற்றி அறிவித்துள்ளனர். அருவாகுளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் அகற்றப்பட்டு விட்டது. அங்கிருந்தவர்கள் மாற்று இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டதால், அந்த ஓட்டுச்சாவடியை எடுக்க வேண்டும்,'' என்றார்.
திருவொற்றியூர், தி.மு.க., கிழக்கு பகுதி செயலர் தனியரசு பேசுகையில், ''இறப்பு மற்றும் இடம்பெயர்தல் ஓட்டுகளை எடுக்க வேண்டும். அருவாகுளம் குடியிருப்பில் வசித்தவர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தொகுதிக்குள் உள்ளதால், மாற்ற வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.
நாம் தமிழர் கட்சி மண்டல செயலர் கோகுல் கூறுகையில், ''தொகுதியில், 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள, ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது குறித்து, கூட்டம் நடந்தது. அப்படி பிரிக்கப்படும் ஓட்டுச் சாவடிகள், ஏற்கனவே உள்ள ஓட்டுச் சாவடிகள் அருகேயே அமைக்க வேண்டும். துாரம் அதிகரித்தால், வாக்காளர்கள் சிரமமடைய கூடும். இறப்பு மற்றும் இடம் பெயர்தல் ஓட்டுகளை நீக்க வேண்டும்,'' என்றார்.
மேலும்
-
அப்போலோ சிறப்பு நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை
-
அடரி ஏரியில் மணல் கடத்திய 7 பேர் கைது
-
த.மா.கா., முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ் சமூக ஊடகப் பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
குளத்தில் தள்ளி தொழிலாளி கொலை உளுந்துார்பேட்டையில் 2 பேர் கைது
-
மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'