ரூ.3 ஆயிரம் லஞ்சம் 4 ஆண்டு சிறை

மதுரை: உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. தனது சகோதரி தேடசெல்விக்கு வாரிசு சான்றிதழ் கோரி 2014ல் உசிலம்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனை பரீசிலித்து ஒப்புதல் வழங்க அரசு ஊழியர் அல்லாத உதவியாளரான செல்லபாண்டி ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை மதுரை ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா முன் நடந்தது.

அரசு வழக்கறிஞர் முத்துவள்ளி ஆஜரானார். செல்லப்பாண்டிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1500 அபராதம் விதித்த நீதிபதி, அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement