சாயல்குடி பேரூராட்சி கூட்டம்

சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சி அலுவலக அரங்கில் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் திருப்பதி வரவேற்றார்.

இதில் 15 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி பேசினர்.

காலதாமதமாக நடந்து வரும் ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்காக புதிய சாலைகள் அமைக்கப்படாதது குறித்து பேசினர்.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement