சகோதரி வீட்டில் திருடியவர் கைது
ஈரோடு,திண்டல், வீரப்பம்பாளையம், யு.ஆர்.சி. நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 35; தனியார் நிறுவன இன்ஜினியர்.
இவர் மனைவி தாரணி. தாரணியின் சகோதரர் வெங்கடேஸ்வரன், 21; கல்லுாரி படிப்பை முடித்து விட்டு தனியார் மொபைல் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
அடிக்கடி தாரணி வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த, 26ல் ஆறுமுகம் திருப்பூர் சென்று விட்டார். தாரணி பள்ளி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கணவருக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் கலைந்து கிடந்தன.
பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, ஒன்னே கால் பவுன் தங்க செயின், அரை பவுன் மோதிரத்தை காணவில்லை.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்தனர். அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வெங்கடேஸ்வரன் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
தெரு நாய்க்கு கருத்தடை செய்ய 200 டாக்டர்கள் அவசர நியமனம்
-
கொரோனா தொற்றுக்கு சென்னையில் ஜோசியர் பலி தமிழகம் முழுதும் 69 பேர் பாதிப்பு
-
அ.தி.மு.க., வெற்றி எதிர்த்த வழக்கு தள்ளுபடி
-
மின் கட்டண உயர்வை கைவிட குறுந்தொழில் சங்கம் கடிதம்
-
கச்சத்தீவு மீட்பே தீர்வு: ஸ்டாலின் தகவல்
-
லட்சம் பெண்களை தொழில் அதிபராக்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க திட்டம்