பார்மசிஸ்ட் மாணவர் தற்கொலை

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும் செவல் மேலத் தெரு சுப்பிரமணியன் மகன் ரோகித் 18.

தென்காசி அருகே உள்ள தனியார் பார்மசிஸ்ட் கல்லுாரியில் முதலாமாண்டு மருந்தாளுனர் படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று ரோஹித் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து புளியங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement