உயர் நீதிமன்ற நீதிபதிகள் 21 பேர் இடமாற்றம்

புதுடில்லி: உச்ச நீதிமன்ற கொலீஜியம் இந்தியாவின் தலைமை நீதிபதி தலைமையில் செயல்படுகிறது. இந்த கொலீஜியம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்கிறது. நீதிபதிகளின் பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் பிற நிர்வாக முடிவுகளை எடுக்கிறது.


அந்த வகையில் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களின் 21 நீதிபதிகளை இடமாற்றம் செய்யும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.


அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவேக் குமார் சிங், பட்டு தேவானந்த் ஆகியோரை முறையே, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளனர்.

Advertisement