சூரியகாந்தி விதை ரூ.12 லட்சத்துக்கு ஏலம்
வெள்ளகோவில்; வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெற்றது.
சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை தேங்காய் பருப்பு, வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இங்கு மார்க்கம்பட்டி, காட்டூர், ஈசநத்தம், வேடசந்துார், மல்லபுரம், செட்டிவலசு பகுதியிலிருந்து பெருமளவு விவசாயிகள் கலந்து கொள்வர்.
நேற்று நடந்த சூரிய காந்தி விதை ஏலத்தில், 22 விவசாயிகள் கலந்து கொண்டு, 21 ஆயிரம் கிலோ சூரியகாந்தி விதையை விற்பனை செய்தனர்.
வெள்ள கோவில், காங்கயம், முத்துார், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் கோரினர். இதில் ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சம் 60.89 ரூபாய்; குறைந்தபட்சம் 51.03 ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர்.
மொத்தம் 12.08 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
-
11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு
-
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க சமூகம் ஒன்றுபட வேண்டும்: ராஜ்நாத் சிங் விருப்பம்
Advertisement
Advertisement