சிகரெட் பண்டல் திருட்டு கேமராவில் சிக்கிய 2 பேர்

சேலம்: சேலம், சத்திரம் அருகே சிவபாலன், 56, என்பவருக்கு சொந்த-மான குடோன் உள்ளது. அங்கிருந்த, 27.69 லட்சம் ரூபாய் மதிப்பில் சிகரெட்கள், லாக்கரில் இருந்த, 5,600 ரூபாய், நேற்று முன்தினம் திருடுபோனது. இதுகுறித்து, குடோன் நிறுவன மேலாளர் சண்முகம், 56, புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.


தொடர்ந்து, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வுக்கு உட்படுத்தி-யதில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு பதிவெண் கொண்ட காரில் வந்து, 2 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனால் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் குழுவினர், பெங்க-ளூரு விரைந்துள்ளனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன், திருடர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement