அதிகமாக படியளப்பது மாநில அரசு: முதல்வர் ஸ்டாலின்

42

சென்னை: ''பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பிரதமர் மீன்வளத் திட்டம் ஆகியவற்றுக்கு மாநில அரசு தான் அதிகமாக நிதி அளிக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் மத்திய அரசைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!



@block_Y@படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசுவிழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.block_Y


இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பா.ஜ., அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement