சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்



சேலம், சேலம் மேற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம், அன்னதானப்பட்டி, சங்ககிரி மெயின் ரோடு பகுதியில் உள்ள மேற்கு கோட்ட மின் அலுவலகத்தில், நாளை (18 ) காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், சேலம் மேற்கு கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர், கலந்து கொண்டு மின்சாரம் குறித்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement