புகழூரில் இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்


கரூர், புகழூரில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் இன்று நடக்கிறது.

கரூர் மாவட்டம், புகழூர் தாலுகாவில், உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் இன்று (18ம் தேதி) காலை, 9:00 மணி முதல் நடக்கிறது.

இதில், தென்னிலை கிழக்கு வி.ஏ.ஓ., அலுவலகம், க.பரமத்தி சுய சேவை மைய கட்டடம், புஞ்சை புகழூர் வடக்கு வி.ஏ.ஓ., அலுவலகம் ஆகிய இடங்களில் பட்டா மாறுதல் முகாம் நடக்கிறது. அங்கு கோரிக்கைகளை மக்கள் மனுக்களாக அளிக்கலாம். இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement