கக்கன் பிறந்தநாள் விழா

பல்லடம் : பல்லடம் தினசரி மார்க்கெட் வளாகத்தில், முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

சமூக ஆர்வலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வணிகர் சங்க பேரவை தலைவர் கண்ணையன், முன்னாள் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈஸ்வரன், யோனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

''அரசியலில் நேர்மை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கக்கன். இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கும் கக்கனை பற்றி தெரியாதது வேதனையாக உள்ளது. எதிர்கால தலைமுறையினர் இவரைப் பற்றி அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

லஞ்ச ஊழல் தலை துாக்கி ஆடி வரும் இன்றைய காலகட்டத்தில், மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த சிறந்த தலைவர் கக்கன்'' என, சமூக ஆர்வலர்கள் கக்கனுக்கு புகழாரம் சூட்டினர்.

தொடர்ந்து, அவரது உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement