நட்பு கால்பந்து: இந்தியா 'டிரா'

ஹிசோர்: இந்தியா, கிர்கிஸ் குடியரசு அணிகள் (23 வயது) மோதிய நட்பு கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.

சவுதி அரேபியாவில், 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து (2026, ஜன. 7-25) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று, வரும் செப். 3-9ல் நடக்கிறது. கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் தகுதிச் சுற்றில் இந்திய அணி, கத்தார், பஹ்ரைன், புருனே அணிகளுடன் விளையாடுகிறது.
இதற்கு தயாராகும் விதமாக தஜிகிஸ்தான் சென்ற இந்திய அணி (23 வயது), இரண்டு சர்வதேச நட்பு போட்டியில் விளையாடியது. தஜிகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 2-3 என தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் கிர்கிஸ் குடியரசு அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 0-0 என 'டிரா' ஆனது.

Advertisement