அடிமைத்தனம்!

ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, அரபு நாடுகள் போன்றவை தங்கள் மொழிக்கு பெருமை சேர்க்கின்றன. ஏன் அடிமையைப் போல் ஆங்கிலத்தை பற்றி காங்கிரசின் ராகுல் பெருமைப்படுகிறார்? நம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சந்தாலி, ஹிந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளால் பெருமைப்படுவோம்.
நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,
குண்டுவீச்சுக்கு பரிசு
ஈரான் மீது குண்டுவீசும் என்பதை தெரிந்தே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு பின்னும் டிரம்புக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமா என பாகிஸ்தான் கூற வேண்டும். டிரம்புடன், பாக்., ராணுவ தலைமை ஜெனரல் உணவருந்தியது இதற்கு தானா? இன்று அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது.
அசாதுதீன் ஓவைசி, தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,
முதல்வராக முடியாது!
பீஹார் மக்களுக்கு தெரியும், வரும் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் வென்றாலும், மீண்டும் முதல்வராக முடியாது. அதற்கு காரணம் ஐக்கிய ஜனதா தளத்தை, பா.ஜ., தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதை, அமித் ஷாவே தெளிவுப்படுத்தியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை, நிதிஷூக்கு பதிலாக அமித் ஷாவே தேர்ந்தெடுத்துவிட்டார்.
தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்