உரிமை கோரப்படாத 360 வாகனங்கள் ஏலம்

சென்னை:சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில், உரிமைக் கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட, 360 இருசக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள், ஜூலை 10ம் தேதி காலை, 10:00 மணியளவில் பகிரங்க ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு ஜூலை, 2ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

அடையாள அட்டை மற்றும் ஜி.எஸ்.டி.,சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி.,தொகையை மறுநாள் முழுதுமாக செலுத்த வேண்டும் என, காவல் துறை அறிவித்துள்ளது.

Advertisement