விஜய் தலைமையில் ஜூலை 4ல் தவெக செயற்குழு கூட்டம்; வெளியானது அறிவிப்பு

சென்னை: விஜய் தலைமையில் ஜூலை 4ம் தேதி த.வெ.க., செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.


இது குறித்து த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்ட அறிக்கை:
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கட்சி தலைவர் விஜய் தலைமையில், வரும் ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.



இந்த கூட்டத்தில், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், கட்சி தலைவரின் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.


மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான தலைமை கட்சி நிர்வாகிகள், சிறப்புக் குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, கட்சி தலைவரின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement