இளம் இந்தியா கலக்கல் வெற்றி * இங்கிலாந்தை வீழ்த்தியது

பிரைட்டன்: இங்கிலாந்து சென்றுள்ள இளம் இந்திய அணி (19 வயது), 5 போட்டிகள் கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பிரைட்டன் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
கனிஷ்க் 'மூன்று'
இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ் (18), இசாக் முகமது (42) ஜோடி துவக்கம் தந்தது. இங்கிலாந்து அணி முன்னாள் 'ஆல் ரவுண்டர்' பிளின்டாப் மகன், ராக்கி பிளின்டாப் 56 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் கைவிட, இங்கிலாந்து அணி 42.2 ஓவரில் 174 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் கனிஷ்க் 3, ஹேனில், அம்ப்ரிஸ், முகமது ஈனான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
வைபவ் கலக்கல்
இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் (21), வைபவ் சூர்யவன்ஷி ஜோடி துவக்கம் தந்தது. கோலியை போல, 18ம் எண் கொண்ட 'ஜெர்சி' அணிந்து விளையாடிய வைபவ், 19 பந்தில் 48 ரன் (5x6, 3x4) எடுத்தார். விஹான் (18), மவுல்யராஜ்சின் (16) உதவினர். இந்திய அணி 24 ஓவரில் 178/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. அபிக்யான் (45), ராகுல் குமார் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement