2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவு; ஒரு சவரன் ரூ.71,440!

2


சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 26) ஆபரண தங்கம் கிராம் 9,070 ரூபாய்க்கும், சவரன் 72,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (ஜூன் 27) தங்கம் விலை கிராமுக்கு, 85 ரூபாய் குறைந்து, 8,985 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் சரிவடைந்து, 71,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில், இன்று (ஜூன் 28) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,930க்கு விற்பனை ஆகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்துள்ளது.

Advertisement