ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் ரோபோடிக் அறுவை சிகிச்சை பாலா ஆர்த்தோ மருத்துவமனை அசத்தல்

திருப்பூர், தாராபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு எதிரே, பி.கே.எம்., நகரில் உள்ளது பாலா ஆர்த்தோ மருத்துவமனை.
கடந்த 18 ஆண்டுகளாக இம்மருத்துவமனை திருப்பூர் மக்களுக்கு எலும்புமருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது. மேலும், திருப்பூரில் முதன் முதலில் ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி, ஒரே ஆண்டில் 150 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பாலா ஆர்த்தோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:திருப்பூரில் முதன் முறையாக அதிநவீன தொழில் நுட்ப வசதி கொண்ட பிரிவுகளை துவங்கியுள்ளோம். இதன்படி ஏ.ஐ., வசதியுடன் கூடிய ரோபோ மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, ஆர்த்தோஸ்கோபி நுண்துளை அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்மா ஸ்டெர்லைசேசன் பிரிவு, அதிநவீன ரேடியோலஜி, மாடுலர் ஐ.சி.யு., பிரிவு, ஏ.ஐ., வசதியுடன் அறுவை அரங்கம் ஆகியன உள்ளன.
இன்றைய நிலையில் பெரும்பாலானோருக்கு மூட்டு தேய்மானம் உள்ளது. இதற்கு மூட்டு மாற்று மட்டுமே நிரந்தர தீர்வு. இதை மேற்கொண்ட 80 சதவீத பேருக்கு திருப்தி என்றாலும் 20 சதவீதத்தினர் திருப்தி அடையவில்லை. அவர்களுக்காகவே இந்த ரோபோடிக் தொழில் நுட்பம். இதுஅனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால், 3.5 லட்சம் செலவாகும் இந்த அறுவை சிகிச்சையை அரசு காப்பீட்டில் இலவசமாக செய்கிறோம். இது 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் பொருந்தும். மற்ற வயதினரும் பயன்பெறும் வகையில் அரசு விதிகளை மாற்ற வேண்டும்.
இதில் பாதிக்கப்படுவோர் மருந்து, ஊசி மூலம் முதல்நிலையை கடக்கலாம்.அடுத்த மூன்று நிலையில் அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.
முழங்கால் தேய்வு ஏற்பட்டோர், சரியான உடல் பயிற்சி, உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.ஆன்லைன் வாயிலாக எங்கள் சிகிச்சை முறை குறித்து அறிந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். கோவை மற்றும் சென்னையிலும் எங்கள் சேவை வழங்கப்படுகிறது. எல்லாரும் வலி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
-
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படை துணை முதல்வர் பேச்சு
-
தயாரிப்பாளர் சங்கம் - 'பெப்சி' பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமிக்க ஐகோர்ட் முடிவு
-
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
-
பயங்கரவாத வழக்கில் கைதானவர் சொத்து முடக்கம்; என்.ஐ.ஏ., நடவடிக்கை
-
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் பதவியேற்பு