பிரிவுபசார விழா
சென்னிமலை, சென்னிமலை இந்திரா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், 18 ஆண்டுகளாக பணியாற்றிய மேலாளர் சுகுமார் ரவி, நேற்று பணி ஓய்வு பெற்றார். சங்க அலுவலகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடந்தது. இதில் கோ-ஆப் டெக்ஸ் கொள்முதல் அதிகாரிகள் துரைமுருகன், பிரேம்குமார் , லலிதா, மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர் கவுதம் குமார், முன்னாள் இந்திரா டெக்ஸ் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
* அந்தியூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர் பழனியம்மாள்; 60; கடந்த, 1990ல் பணியில் சேர்ந்தவர் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரிவுபசார விழா நடந்தது. விழாவில் செயல் அலுவலர் சதாசிவம், தலைவர் பாண்டியம்மாள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அலுவலக ஊழியர்கள் சார்பில், பீரோ மற்றும் மிக்ஸி நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
மேலும்
-
சாலை நடுவே மரங்களை வெட்டாமல் ரூ.100 கோடிக்கு ரோடு போட்ட அரசு
-
கப்பலில் தீ விபத்து இந்தியர்கள் மீட்பு
-
ராணுவ பிரதிநிதி சர்ச்சை கருத்து இந்திய துாதரகம் விளக்கம்
-
பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய பாக்., நபர் கைது
-
கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் திட்டமிட்டு நடந்ததாக போலீஸ் தகவல்
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்