குடியிருப்பு பகுதியில் பஞ்சாலை மீண்டும் செயல்படுவதால் அவதி

ஈரோடு, சென்னிமலை அம்மாபாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
நாங்கள் வசிக்கும் இடத்தில் மூன்றாண்டுக்கு முன் தனியார் நுாற்பாலை அமைக்கப்பட்டது. ஆலையில் இருந்து பஞ்சு துாசி, இரைச்சல் சத்தம் அதிகமாக வருவதால் துாங்க, மூச்சு விட சிரமமாக உள்ளது. ஆஸ்துமா பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த ஜன.,6ல் கலெக்டரிடம் மனு வழங்கிய நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். மார்ச், 17ல் ஆலை செயல்பாட்டை நிறுத்தினர். ஆனால் கடந்த ஏப்.,11 முதல் ஜன்னல்களை மூடி நுாற்பாலை செயல்படுகிறது.
இதனால் துாசி மீண்டும் வெளிப்படுவதால் சிரமமாக உள்ளது. ஆலையை குடியிருப்பு பகுதிக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். அல்லது மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement