மயானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வேறிடத்தில் அமைக்க வலியுறுத்தி முறையீடு
ஈரோடு,பவானி நில மீட்புக்குழு, பவானி நகராட்சி, 12வது வார்டு பகுதி மக்கள், ஈரோடு மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று வழங்கிய மனுவில் கூறியது:
பவானி நகராட்சி, 12வது வார்டு மயான பகுதியை சுருக்கி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்துக்கு எதிராக கருத்தை பதிவு செய்தோம். மயான பகுதியில் ஏற்கனவே மின் மயானம், நுண் உர மையத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டு, பொது மயான பகுதி குறைவாக உள்ளது.
பவானியில் பெரும்பான்மையான சில சமுதாயத்தினர், உடல்களை மின் மயானத்தில் எரிக்க மாட்டார்கள். பொது மயானத்தில் அடக்கம் செய்வார்கள். மயானத்தை சுருக்கிவிட்டால் அவர்கள் பாதிக்கப்படுவர். மயான காம்பவுண்ட் சுவரை ஒட்டி, குடியிருப்பு வீடுகள் உள்ளன. 27வது வார்டு கழிவு நீரை இங்கு கொண்டு வருவதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும். யாரும் குடியிருக்க இயலாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முன், மக்களிடம் நகராட்சி எவ்வித கருத்தும் கேட்கவில்லை. தற்போது முழு மயானத்தையும் ஆக்கிரமித்து, சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவங்கி உள்ளனர். அத்திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், எதிர்காலத்தில் மயான இட பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், இத்திட்டத்தை மயான பகுதியில் செயல்படுத்துவதை தவிர்த்து, வேறிடத்தில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள்; முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
-
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படை துணை முதல்வர் பேச்சு
-
தயாரிப்பாளர் சங்கம் - 'பெப்சி' பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமிக்க ஐகோர்ட் முடிவு
-
ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
-
பயங்கரவாத வழக்கில் கைதானவர் சொத்து முடக்கம்; என்.ஐ.ஏ., நடவடிக்கை
-
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் பதவியேற்பு