பேட்டரி திருடியவர் சிக்கினார்



சேலம்,சேலம், கன்னங்குறிச்சி சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார், 42, ஆட்டோ டிரைவர், இவர், கன்னங்குறிச்சியில் கண்ணாடி கடை அருகே, நேற்று முன்தினம் ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது,

ஆட்டோவில் உள்ள பேட்டரியை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி, கிச்சிப்பாளையம், அந்தேரிப்பட்டியை சேர்ந்த திருமாறன், 28, என்பவர் பேட்டரியை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, பேட்டரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement