தார் சாலை பணி துவக்கம்

கச்சிராயபாளையம்: கடத்துார் ஊராட்சியில் 75.64 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடும் பணி துவங்கியது.

கச்சிராயபாளையம் அடுத்த கடத்தூர் ஊராட்சியில் உள்ள முயல் குன்று பகுதியில் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 75.64 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி சாலை பணி நேற்று துவங்கியது.

சாலை பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துணைச் சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி வரவேற்றார்.

ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத், ஊராட்சி தலைவர் பேபி அய்யாசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மணி, அன்பழகன், அய்யாவு மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement