ரோடு இல்லை, சேதமான தொட்டி துாண்கள் விருதுநகர் துலுக்கப்பட்டி ஊராட்சி மக்கள் அவதி

விருதுநகர்: விருதுநகர் ஒன்றியம் துலுக்கப்பட்டி ஊராட்சியில் ரோடு இல்லை, சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டி துாண்கள், எரியாத தெருவிளக்குகள், சுகாதார வளாகங்கள் இல்லாததால் திறந்தவெளி அதிகரிப்பு என பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர் அப்பகுதி மக்கள்.

விருதுநகர் ஒன்றியம் துலுக்கப்பட்டி ஊராட்சி பரப்பளவில் பெரியது. அஞ்சம்பட்டி, கருப்பணசார்பட்டி, துலுக்கப்பட்டி, ராஜீவ் காந்தி நகர், சுந்தரலிங்காபுரம் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நான்கு வழிச்சாலை பிரித்து செல்கிறது. இதனால் அஞ்சம்பட்டி, கருப்பணசார்பட்டி துாரத்தில் அமைந்துள்ளன.

துலுக்கப்பட்டியில் ரோடு வசதி போதுமானதாக இல்லை. ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு ரோடு 10 ஆண்டுகளுக்கு மேல் போடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்போர் சிரமப்படுகின்றனர். இதே பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி ஊருணி புதர்மண்டி காணப்படுகிறது. துலுக்கப்பட்டி ஊராட்சியின் ஒரு சில பகுதிகளில் சுகாதார வளாகம் இல்லை. அருந்ததியர் குடியிருப்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள துாய்மை இந்தியா திட்ட கழிப்பறைகளின் கதவுகள் சேதமாகி உள்ளது. இவற்றின் உறிஞ்சுக்குழி சேதமாகி காணப்படுகிறது. அதே போல் இவற்றிற்கு போதிய தண்ணீர் வசதி இல்லை.

ராஜீவ் காந்தி நகர் உள்ளிட்ட பிற கிராமங்களிலும் கழிப்பிட வசதி இல்லாததால் மக்கள் திறந்தவெளியை நாடுகின்றனர். மேலும் வாறுகால் வசதி இல்லாததால் மக்கள் திண்டாடுகின்றனர். ரோட்டில் விடப்படும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. துலுக்கப்பட்டி அருந்ததியர் குடியிருப்பில் ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில் பணிமுடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மயான வசதி போதுமானதாக இல்லை. பாதை, கூரை என எதுவுமில்லை. மழைக்காலங்களில் சிரமப்படுகின்றனர்.

குடிநீர் வசதி இருந்தாலும், மினரல் குடிநீர் பிளான்ட், சமுதாயக்கூட வசதி அத்தியாவசியமாக உள்ளது. அஞ்சம்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமான நிலையில் காணப்படுகிறது. துண்களின் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளன. ராஜீவ் காந்தி நகரில் மக்கள் தொகை பெருகி விட்ட நிலையில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வேண்டும் என்கின்றனர். எனவே துலுக்கப்பட்டி ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன்வர வேண்டும்.

அருந்ததியர் குடியிருப்பில் தெருவிளக்குள் எரியாமல் இரவு நேரங்களில் சிரமப்படுகிறோம். மயான வசதி இன்றி கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம். ஊராட்சி நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்தி, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் மின் இணைப்பு இல்லை. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம்.

- பாண்டீஸ்வரன், தனியார் ஊழியர்.

@block_B@

இருளில் வசிக்கிறோம்

block_B

ராஜீவ் காந்தி நகரில் மக்கள் தொகை பெருகி விட்டது. அதற்கேற்ப 50 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும். வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

- ரவிச்சந்திரன், வியாபாரி.

பொது சுகாதார வளாகங்கள் எதுவுமில்லை. இதனால் திறந்தவெளி அதிகரித்துள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு பொது சுகாதார வளாகங்கள் கட்டி தர வேண்டும். எங்கள் பகுதி ஊருணியை பராமரித்து நீர் தேக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

- பாலசுப்பிரமணியன், ஓய்வு அரசு ஊழியர்.

@block_B@

திறந்தவெளி அதிகரிப்பு

block_B

Advertisement