16 வயது சிறுமி கடத்தல்: 2 பேர் 'போக்சோ'வில் கைது
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே, 16 வயது சிறுமியை கடத்திய இருவரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 21. இவர், திருப்பூரில், பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, 16 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்டது. சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், திருவண்ணாமலை மேற்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, ஹரீஷ் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த, அவரது உறவினர் ஊத்தங்கரையை சேர்ந்த ராபின், 24, ஆகியோரை போக்சோவில் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திண்டிவனத்திற்கு மாஜி முதல்வர் வருகை வரவேற்பு குறித்து அ.தி.மு.க., ஆலோசனை
-
டாஸ்மாக்கில் மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ; வைரலால் ஆயுதப்படைக்கு மாற்றம்
-
கிரெடிட் கார்டு, பான்-ஆதார் இணைப்பு; இன்று முதல் அமலான புதிய மாற்றங்கள்
-
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
-
குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து எருமனுாரில் சாலை மறியல்
-
வானுார், கிளியனுார் ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Advertisement
Advertisement