செய்யாலுாரில் புதிய டிரான்ஸ்பார்மர்

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள செய்யாலுாரில் குறைந்தழுத்த மின்சாரத்தால் கிராம மக்கள் கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து 3 நாட்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்வாரிய ஊழியர்கள் பழைய டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தினர்.

தற்போது செய்யாலுார் பகுதியில் சீரான மின்வினியோகம் செய்யப்பட்டு மக்கள் பிரச்னை தீர்ந்தது.

Advertisement