தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன் ஆகியோர் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 400 மாணவ மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கினர். ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160!