நாதஸ்வர வித்வான் கழுத்து அறுத்து கொலை; நெல்லிக்குப்பம் அருகே பயங்கரம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே நாதஸ்வர வித்வான் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு, புதுநகரை சேர்ந்தவர் நாதஸ்வர வித்வான் நாகமுத்து,52; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த பட்டம்மாள் என்பவரின் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, சுடுகாட்டில் இருப்பதாக கூறினார்.
இரவு வரையும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இதற்கிடையே, சுடுகாடு அருகில் உள்ள வாய்க்காலில் நாகமுத்து கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.பி.,ஜெயக்குமார், டி.எஸ்.பி.,பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரனை நடத்தினர். நாகமுத்து கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் ஜெயின், கையில் அணிந்த மோதிரம் காணாதது தெரிந்தது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
நாகமுத்து உடல் அருகில் கிடந்த அவரது மொபைல் போன் மீட்கப்பட்டது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். நகைக்காக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. மொபைல் போனில் யாரிடம் பேசினார் என்பது குறித்தும், நாகமுத்துவை சுடுகாடு வரை பைக்கில் அழைத்து சென்ற உறவினர் வீரமணி, கொலை நடந்த இடம் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருப்பதால் அங்கு மது அருந்துபவர்களிடம் விசாரணை நடக்கிறது. நாதஸ்வர வித்வான் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு நிலவியது.
@block_B@
மிளகாய் துாள் நாகமுத்துவை மர்ம நபர்கள் திட்டமிட்டே கொலை செய்துள்ளனர். குறிப்பாக, நாகமுத்துவை கொலை செய்த பிறகு எந்த தடயம் கிடைக்கக் கூடாது என்பதால் ரத்தகறை படிந்த இடங்களில் மிளகாய் துாள் துாவியுள்ளனர். இதனால் கொலையாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.block_B
மேலும்
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160!