2 கல்லுாரி மாணவி மாயம் போலீசார் விசாரணை
விழுப்புரம் : விழுப்புரத்தில் மாயமான இரு கல்லுாரி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வி.மருதுாரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தீபிகா, 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் அபிநயா,19; இவர், அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 27 ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அபிநயாவின் தாய் ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160!
Advertisement
Advertisement