ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-3' * 'டி-20' பேட்டர் தரவரிசையில்...

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 771 புள்ளியுடன் 4வது இடத்தில் இருந்து, 'நம்பர்-3' இடம் பிடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் சதம் விளாசியதை அடுத்து, இந்த முன்னேற்றம் கிடைத்தது. தவிர, சமீபத்தில் வெளியான ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ஸ்மிருதி, 'நம்பர்-1' ஆக உள்ளார்.
முதல் இரு இடத்தில் ('டி-20') ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (794), வெஸ்ட் இண்டீசின் ஹேலே மாத்யூஸ் (774) உள்ளனர்.
தவிர இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (622), 12 வது இடத்தில் நீடிக்கிறார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஷபாலி (615) 13, ஹர்லீன் (318) 83வது இடத்துக்கு முன்னேறினர்.
பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி (735) 3, ரேணுகா (721) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

Advertisement