மான்செஸ்டர் சிட்டி 'ஷாக்' * கிளப் உலக கால்பந்தில் ஏமாற்றம்

ஆர்லண்டோ: 'கிளப்' உலக கால்பந்தில் இருந்து வெளியேறியது மான்செஸ்டர் சிட்டி அணி. கூடுதல் நேரத்தில் அசத்திய அல் ஹிலால் அணி, காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவில், கிளப் அணிகளுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. ஆர்லண்டோவில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணி, சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணிகள் மோதின.
9 வது நிமிடம் கார்வல்ஹோ முதல் கோல் அடிக்க, முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் மார்கஸ் லியனார்டோ (46), ஒலிவரா (52) தலா ஒரு கோல் அடிக்க, அல்ஹிலால் அணி 2-1 என முந்தியது. மான்செஸ்டர் சிட்டி வீரர் ஹாலண்ட் (55) கோல் அடிக்க, போட்டி 2-2 என சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இம்முறை அல் ஹிலால் வீரர் கவுலிபாலி (94), மான்செஸ்டர் வீரர் போடென் (104) தலா ஒரு கோல் அடிக்க ஸ்கோர் மீண்டும் 3-3 என ஆனது.
போட்டியின் 112வது நிமிடத்தில் சக வீரர் அடித்த பந்தை அல் ஹிலான் அணியின் மிலின்கோவிச் தலையால் முட்டி கோலாக்க முயன்றார்.
அப்படியே வலது புறமாக அந்தரத்தில் பாய்ந்த மான்செஸ்டர் கோல் கீப்பர் எடர்சென், கையால் தள்ளி விட்டார்.
அங்கு வந்த லியனார்டோ, பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
முடிவில் அல் ஹிலால் அணி 4-3 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் பிரேசிலின் புளுமினென்ஸ் அணியை ஜூலை 4ல் சந்திக்க உள்ளது.

Advertisement