அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் தமிழக பா.ஜ.,வினர் கைது

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அநாகரிகமாக பேசிய, தி.மு.க., -- எம்.பி., - ராஜாவை கண்டித்து, சென்னையில் நேற்று ஏழு இடங்களில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, திருவான்மியூரில், பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 70 பேர் பங்கேற்றனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் போராட்டத்திற்கு அனுமதி தராத நிலையில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில், 150க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் திரண்டனர்.
ஆர்ப்பாட்டம் துவங்கும் முன், பா.ஜ.,வினரை கைது செய்ய முயன்றனர். இதனால், பா.ஜ.,வினர் மற்றும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின், கரு.நாகராஜன் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சரை தரக்குறைவாக பேசிய, ஆ.ராஜாவை கண்டித்து, சென்னையில் ஏழு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆளுங்கட்சியினர் ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி தரும் போலீசார், பா.ஜ.,வுக்கு அனுமதி தர மறுக்கின்றனர்.
இது, ஜனநாயக குரல் வளையை நெரிக்கும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு
-
ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!