பி.ஜி.பி., வேளாண்மை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்திலுள்ள, பி.ஜி.பி., வேளாண்மை அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடந்தது.
பி.ஜி.பி., கல்வி குழுமத்தின் நிறுவனர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பாளராக நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் பங்கேற்றார். மேலும் விழாவில் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி வரவேற்று பேசினார். கடந்த ஆண்டின் செயல்பாடுகள் குறித்த மதிப்பாய்வு, முக்கிய சாதனைகள் மற்றும் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நுண்ணறிவுகளை கல்லுாரி முதல்வர் கோபால்
ஆண்டு அறிக்கையாக வெளியிட்டார்.மேலும் தலைமை உரையினை பி.ஜி.பி., கல்வி குழுமத்தின் நிறுவனர் பழனி ஜி பெரியசாமி, துணைத் தலைவர் விசாலாட்சி பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்து பேசினர். தொடர்ந்து கல்லுாரி முதன்மையர் பெரியசாமி, தாளாளர் பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்டு விழாவின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி துணை முதல்வர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்
மேலும்
-
'கேம் சேஞ்ஜர்' தோல்வி குறித்து புலம்பல்: 'காண்டு' ஆன ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு 'சேஞ்ஜ்' ஆன தயாரிப்பாளர்
-
ஆபரணத் தங்கம் 2 நாட்களில் ரூ. 1200 உயர்வு: விலையில் தொடரும் ஏறுமுகம்
-
ஆர்.எஸ்.எஸ்., ஆபீஸ் முற்றுகை; இளைஞர் காங்கிரசார் கைது
-
அதிக லாப ஆசை காண்பித்து பெண்களிடம் ரூ.50 கோடி மோசடி?
-
மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ஒரு நாள் 'ஜெயில்'
-
செக் போஸ்ட்