திருவாலங்காடில் 3 சாலைகளில் 37 இடங்களில்...ஆபத்தான சாலை வளைவு :விபத்து உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை அவசியம்

திருவாலங்காடு:திருவாலங்காடில், மூன்று நெடுஞ்சாலைகளில், 37 இடங்களில் வளைவுகள் உள்ளன. எட்டு இடங்களில் குண்டூசி வளைவுகளும், தடுப்புகள் இன்றியும், சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து ள்ளனர். இதை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வழியாக திருவள்ளூர்- - அரக்கோணம், தக்கோலம்- - கனகம்மாசத்திரம், திருவாலங்காடு- - பேரம்பாக்கம் நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த மூன்று நெடுஞ்சாலைகள், திருவாலங்காடின் முக்கிய சாலையாக உள்ளது.
10 வளைவுகள்
இந்த சாலை வழியாகவே காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் திருத்தணி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், 18 கி.மீ., துாரம் கொண்ட தக்கோலம் -- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையில் முத்துக்கொண்டாபுரம், அத்திப்பட்டு, கூர்மவிலாசபுரம், சின்னம்மாபேட்டை, சின்னகளக்காட்டூர் பெரியகளக்காட்டூர் என, மொத்தம் 16 இடங்களில் வளைவுகள் உள்ளன.
அதேபோல், 9 கி.மீ., துாரம் கொண்ட திருவாலங்காடு -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நாராயணபுரம், வரதாபுரம், மஞ்சாகுப்பம், கூடல்வாடி, திருவாலங்காடு, பழையனுார் உள்ளிட்ட, 11 இடங்களில் வளைவுகள் உள்ளன.
மேலும், 14 கி.மீ., துாரம் கொண்ட திருவாலங்காடு -- பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் பழையனுார், ராஜபத்மாபுரம், மணவூர், பொன்னாங்குளம், பாகசாலை, களாம்பாக்கம் உட்பட, 10 இடங்களில் வளைவுகள் உள்ளன.
841 விபத்து
மேற்கண்ட பகுதிகளில் முத்துக்கொண்டாபுரம், சின்னம்மாபேட்டை, பாகசாலை, களாம்பாக்கம் ஒரத்துார் உட்பட, எட்டு இடங்களில் குண்டூசி வளைவுகள் உள்ளன.
இந்த மூன்று மாநில நெடுஞ்சாலைகளில், ஐந்து ஆண்டுகளில் 841 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 68 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து, திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், 'நெடுஞ்சாலைகளில் ஆய்வு செய்து வளைவுகள், தடுப்பு மற்றும் ரிப்ளக்டர் பொருத்தப்படும். சாலைகளில் இருபுறமும் தாழ்வாக உள்ள பகுதிகளில் தடுப்பு அமைக்கப்படும். இரவில் வாகன ஓட்டிகள் வளைவுகளை அறியும் வகையில் எச்சரிக்கை பலகை, வழிக்காட்டி பலகை அமைக்கப்படும்' என்றார்.
'எஸ்' வளைவால் ஆபத்து
இருபது ஆண்டுகளாக திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு, திருவள்ளூர் --- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று வருகிறேன். கூடல்வாடி பகுதியில், 'எஸ்' வடிவில் சாலை வளைந்து வளைந்து செல்கிறது. வாகனங்கள் இப்பகுதியை கடக்கும்போது தடுமாற்றத்துடன் செல்கின்றன. இரவு நேரங்களில் சாலை வளைவுகளில் திரும்பும்போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதே சாலையில் பழையனுார் பகுதியில் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- கே.மகேஷ், திருவாலங்காடு.
பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது
பேரம்பாக்கம் சாலையில் மணவூர், -எல்விபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும், 4 அடி வரை பள்ளமாக உள்ளது. வளைவுகளில் மிதவேகத்தில் சென்றாலும், திரும்பும்போது சாலையோர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. மேலும், எச்சரிக்கை பலகை மற்றும் சாலையோர தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வளைவு பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ள வேண்டும்.
- எல்.ராமமூர்த்தி, மணவூர்.
@block_B@
5 ஆண்டுகளில் நடந்த விபத்துகள்
ஆண்டு விபத்துகள் உயிரிழப்பு
2020 - --21 176 18
2021 - --22 183 15
2022-- - 23 165 11
2023 - --24 146 10
2024 - --25 171 14
மொத்தம் 841 68block_B
மேலும்
-
அறநிலைய துறை ஆலோசனை குழு உறுப்பினர் பதவி நீட்டிப்பு
-
பள்ளிக்கரணையில் பெட்ரோல் குண்டு வீசி ரவுடியை கத்தியால் வெட்டிய 5 பேர் கைது
-
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும்; முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
மேலும் 30 பூங்காக்களில் அமைகிறது நீரை உள்வாங்கும் 'ஸ்பாஞ்ச் பார்க்'
-
போதை பொருள் கும்பலை கைது செய்த போலீசாருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
-
கார் ரேஸ் நடத்திய சாலையில் பள்ளம்: தடுமாறி செல்லும் வாகனங்கள்