'வீடுதோறும் பிரசாரம்' அமைச்சர் மூர்த்தி தகவல்

மதுரை : 'மதுரை மாவட்டம் முழுவதும் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் வீடு தோறும் மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பா.ஜ., அரசால் தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், தமிழக மண், மொழி காக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்று திரட்டவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளார்.

வரும் 45 நாட்களுக்கு இப்பிரசாரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுதோறும் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளோம்.

இன்று (ஜூலை 2) மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டம் நடக்கும். நாளை (ஜூலை 3) முதல் வீடு தோறும் சென்று பிரசாரம் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தின் 10 சட்டசபை தொகுதிகளிலும் பாரபட்சமின்றி நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். நகர் செயலாளர் தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பங்கேற்றனர்.

Advertisement