மக்களின் நம்பிக்கையை பெற்றது பா.ஜ., மட்டுமே: மத்திய அமைச்சர் ராஜ்நாத்

பாட்னா: "இந்திய ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை பா.ஜ., மட்டுமே பெற்றுள்ளது," என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பீஹாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதன் அடிப்படையில், பா.ஜ., தயாராகி வருகிறது.
இந்நிலையில் பீஹார் மாநிலம் பாட்னாவில் ஜியான் பவனில் இன்று பா.ஜ., செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
"இந்திய ஜனநாயகத்தில் மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்துள்ளது. ஆனால் அந்த நம்பிக்கையை பா.ஜ., மட்டுமே பெற்றுள்ளது.
பா.ஜ., மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி உள்ளது. அதை மக்கள் பா.ஜ., வெளியிட்டதேர்தல் அறிக்கை புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இனி வரும் காலங்களிலும் பா.ஜ., அளிக்கும் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றுவோம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
மேலும்
-
த.வெ.க., ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் திடீர் அனுமதி
-
'ஆபர்' பெயரில் விலை குறைப்பால் ஓட்டல் ஓனர்கள் அலறல்
-
தேர்தலில் நிற்பதை தவிர வழியில்லை; தொழில்துறையினர் அறிவிப்பு
-
கடத்த பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
-
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலுக்கு செல்லும் உபரி நீர்; புதிய தடுப்பணைகள் அவசியம்
-
கஞ்சா செடியின் விதைகள், இலைகள் வைத்திருப்பது குற்றமல்ல: கோர்ட்