ஜூனில் 1187.7 மி.மீ., மழை கடந்தாண்டை விட குறைவு

தேனி : தேனி மாவட்டத்தில் கடந்த ஜூனில் 1187.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு பதிவான மழை அளவை விட குறைவாகும்.

மாவட்டத்தில் 13 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மழைமானி மூலம் தென்மேற்கு பருவ மழை அளவிடப்படுகிறது. கடந்த மாதம் ஆண்டிபட்டியில் 1.6 மி.மீ., அரண்மனைப்புதுார் 5 மி.மீ., போடி 11.6 மி.மீ., கூடலுார் 63.8 மி.மீ., மஞ்சளாறு 2 மி.மீ., பெரியகுளம் 13 மி.மீ., பெரியாறு அணை 579.2 மி.மீ., சோத்துப்பாறை அணை 12.5 மி.மீ., தேக்கடி 361.2 மி.மீ., அணை, உத்தமபாளையம் 53.8 மி.மீ., வைகை அணை 4.2 மி.மீ., வீரபாண்டி 34.4 மி.மீ., சண்முகாநதி அணையில் 45.4 மி.மீ., மழை என மொத்தம் 1187.7 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. 2024 ல் 1435.2 மி.மீ., பெய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில் மழை குறைவாக பெய்துள்ளது.

Advertisement