வில்லியனுார் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

புதுச்சேரி :வில்லியனுாரில் பெருந்தேவித்தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 21ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி, தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 6ம் தேதி காலை 8:00 மணிக்கு பல்லக்கு மோஹநாவதாரம், மாலை 6:30 மணிக்கு கருட சேவையும், 8ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 10ம் தேதி காலை 7:30 மணிக்கு தேர் வீதியுலா, மாலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன், உபயதாரர்கள், ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement