இன்று இனிதாக
ஆன்மிகம்
ஆதி திருமஞ்சனம்
ஆதி திருமஞ்சனத்தை ஒட்டி நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜிநகர். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.
சமயபுரம் ஆயிர வைசியர் சங்கம் சார்பில், நடராஜர், சிவகாமி சுந்தரி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் - மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை; மஹா மங்களாரத்தி - இரவு 9:00 மணி. இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.
நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் - மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில், சிவாஜிநகர்.
வராஹி நவராத்திரி
வராஹி நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு ஸ்ரீ சரஸ்வதி அலங்காரம், லலிதா சஹஸ்ரநாமம், குங்கும அர்ச்சனை - மாலை 6:30 மணி; மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: கதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன், பெங்களூரு.
மண்டல அபிஷேகம்
மண்டல பூஜையையொட்டி மண்டல அபிஷேகம் - காலை 8:00 மணி முதல்; மஹா மங்களாரத்தி - காலை 10:00 மணி. இடம்: கோதண்டராம சுவாமி கோவில், ஈஜிபுரா, பெங்களூரு.
லேசர் ஷோ
அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி. இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.
ஜெயந்தி உத்சவம்
ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் நல அறக்கட்டளை சார்பில் ஜெயந்தி உத்சவத்தை ஒட்டி, சுப்ரமண்ய ஹோமம், காலபைரவர் ஹோமம் - காலை 9:00 மணி. இடம்: கோவில் வளாகம், மைசூரு.
திருவிழா மஹோத்சவம்
ஸ்ரீரேணுகா எல்லம்மா ஹாகு கம்பாளம்மா கோவில் 33ம் ஆண்டு திருவிழா மஹோத்சவத்தை ஒட்டி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 7:00 மணி. இடம்: கோவில் வளாகம், கோட்வால் ராமையா சாலை, மைசூரு.
பொது
நடனம்
கதக் நடனம் - இரவு 8:00 முதல் 9:15 மணி வரை. இடம்: மெடாய் - தி ஸ்டேஜ் பெங்களூரு, 15, கே.எச்.பி., மிக் காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.
சமையல் பயிற்சி
ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
பயிற்சி
யோக மந்திரா அறக்கட்டளை சார்பில் இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை. மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.
ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி. இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்:மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.
இசை
கன்னட மெலோடீஸ் - இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.
பார்ட்டி அட் ஜி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஜி ஸ்டிரீட், 48, நான்காவது 'பி' குறுக்கு, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
காமெடி
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.
ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.
கிரவுண்டெட் காமெடி - இரவு 9:00 முதல் 12:00 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
மேலும்
-
தனியார் பள்ளி பஸ் மோதி கணவர் கண் முன் மனைவி பலி
-
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுத்தை
-
காஞ்சிக்கோவிலில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை துவக்கம்
-
'தமிழகத்தை வலுப்படுத்த இன்று முதல் மக்கள் சந்திப்பு'
-
ஈரோடு பெருமாள் கோவிலில் மஹா சுதர்ஸன ஹோமம் துவக்கம்
-
தகனமேடை அமைக்க எதிர்ப்பு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை