ஈரோடு பெருமாள் கோவிலில் மஹா சுதர்ஸன ஹோமம் துவக்கம்
ஈரோடு ஈரோடு, கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் மஹா சுதர்ஸன ஹோமம் நேற்று துவங்கியது.
காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், திவ்யபிரபந்தம், காயத்ரி மந்திரம், போன்றவற்றுடன் மஹா சுதர்ஸன ஹோமம் ஆரம்பித்தது. மாலையில் விஷ்ணுசஹஸ்ர நாமம் நடந்தது.
இரண்டாவது நாளான இன்று (3ம் தேதி) காலை 6:00 மணிக்கு, சுப்ரபாதத்துடன் திருப்பல்லாண்டு, திருவாராதனம், நீராட்டல், பூச்சூட்டல், கும்ப ஆராதனையுடன் மஹா சுதர்ஸன ஹோமம் நடக்கிறது.
இறுதி நாளான நாளை (4ம்தேதி) காலை 5:30 மணி முதல், பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் துவங்கி மஹா சுதர்ஸன ஹோமம் பூர்த்தி செய்து, கலச புறப்பாடு, மூலமூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திக்கு தீர்த்தம் நடக்க உள்ளது. பின், உற்சவர் சக்கரத்தாழ்வார்க்கு திருமஞ்சனம், மஹாதீபாராதனை போன்றவை நடந்து, மாலை 5 மணிக்கு வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவகங்கை அருகே இளைஞர் வெட்டிக்கொலை
-
நோக்கம் நிறைவேற்றாமல் பின்வாங்க மாட்டேன்
-
பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு
-
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்: தொண்டியில் இருவர் கைது
-
சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு
-
தேனி பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல் மதுரை யுடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு
Advertisement
Advertisement