காஞ்சிக்கோவிலில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை துவக்கம்

பெருந்துறை, பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்

கோவிலில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்க புதிய கிளை துவக்க விழா மற்றும் ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் தலைமை வகித்தார். பெருந்துறை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரஞ்சித்ராஜ் முன்னிலை வகித்தார். காஞ்சிக்கோவில் நகர அ.தி.மு.க., செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். விழாவில் சிறப்பாளராக, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கருப்பணன் பங்கேற்று, அண்ணா ஆட்டோ தொழிற் சங்க புதிய கிளையை துவக்கி வைத்தார். பின்னர், ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.

இதில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் வடிவேல், செயலாளர் ஜான், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் அருணாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Advertisement