விக்கிரவாண்டி - தஞ்சை நெடுஞ்சாலையில் பயன்பாட்டிற்கு வந்தது 2வது சுங்கச்சாவடி

தஞ்சாவூர் : தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் முடிந்து, நேற்று காலை முதல், மானம்பாடி சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை, 165 கி.மீ.,க்கு, மூன்று தொகுப்புகளாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலும், சோழபுரத்தில் இருந்து சேத்தியாத்தோப்பு வரையிலான இரண்டு தொகுப்புகளில் சாலைப் பணிகள் நிறைவடைந்தது.
இதில், தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் இடையே வேம்புக்குடியில், சில மாதங்களுக்கு முன், சுங்கச்சாவடி பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், சோழபுரம் -- சேத்தியாத்தோப்பு சாலையில், மானம்பாடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. ஜூன், 12 முதல் சுங்கச்சாவடி பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
இதையடுத்து, தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் முடிந்து, நேற்று காலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மானம்பாடி சுங்கச்சாவடி, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறைக்கு, 105 ரூபாய்; இலகு ரக வாடகை வாகனங்களுக்கு, 170 ரூபாய்; பஸ், லாரிகளுக்கு, 360 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
இதே போல உள்ளூர் வாகனங்களுக்கு பாதி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும்
-
எம்.பி., திறந்த குடிநீர் குழாய் விழா முடிந்ததும் திடீர் மாயம்
-
சிறுமியை திருமணம் செய்தவர் மீது 'போக்சோ' வில் வழக்கு பதிவு
-
விருத்தாசலத்தில் பதுக்கிய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
-
கோல மாவு மண் மூட்டை விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: திண்டிவனம் அருகே சோகம்
-
அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் அவதி
-
கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய வீரருக்கு பயிற்சியாளர் பதவி