அஜித்குமார் கொலை வழக்கு; போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்தவர் பாதுகாப்பு கோரி டி.ஜி.பி.,க்கு கடிதம்

சென்னை: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார். இது வழக்கின் விசாரணைக்கு முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கிய வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து (9)
Nagarajan D - Coimbatore,இந்தியா
03 ஜூலை,2025 - 09:47 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
03 ஜூலை,2025 - 09:32 Report Abuse

0
0
Reply
Vaduvooraan - Chennai,இந்தியா
03 ஜூலை,2025 - 08:53 Report Abuse

0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
03 ஜூலை,2025 - 08:34 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
03 ஜூலை,2025 - 08:22 Report Abuse

0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
03 ஜூலை,2025 - 08:12 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
03 ஜூலை,2025 - 08:10 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
03 ஜூலை,2025 - 07:48 Report Abuse

0
0
Reply
Sankar Ramu - Carmel,இந்தியா
03 ஜூலை,2025 - 07:29 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகி விடும்: மார்க்சிஸ்ட் கணிப்பு
-
கேரளாவில் அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: கடைகளுக்குள் புகுந்து சேதம்
-
போதைப்பொருள் கும்பல் தலைவன் கேரளாவில் கைது
-
மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மோதி ஒருவர் பலி
-
தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம்: 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு
-
என் உயிரே போனாலும் பரவாயில்லை; அஜித் குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் பரபரப்பு பேட்டி
Advertisement
Advertisement