தாயை தாக்கிய மகன் கைது

புளியந்தோப்பு, தாயை கத்தியால் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

புளியந்தோப்பு, போகிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமுதா, 45. இவருக்கு ஜவஹர், 24, சஞ்சய், 22, என, இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் உமாபதி, சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார்.

நேற்று அதிகாலை 1:00 மணியளவில், வீட்டில் இருந்த தாய் குமுதாவிடம், ஜவஹர் அதீத போதையில், மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும், தம்பி சஞ்சயிடமும் பணம் கேட்டுள்ளார். இருவரும் பணம் தர மறுத்த நிலையில், ஜவஹர் வீட்டில் இருந்த பேனா கத்தியால், குமுதா மற்றும் சஞ்சய் என இருவரையும் தாக்கினார்.

இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில், சம்பவ இடத்திற்கு விரைந்த புளியந்தோப்பு போலீசார், ஜவஹரை கைது செய்தனர்.

குமுதாவுக்கு வலது கையிலும், சஞ்சய்க்கு முதுகு மற்றும் கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஜவஹர் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் உள்ளன.

Advertisement