13 வயது சிறுமியிடம் சில்மிஷம் 79 வயது முதியவருக்கு 'போக்சோ'

நொளம்பூர், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, 79 வயது முதியவர் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோருடன் வசித்துவரும், 13 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெட்டிக்கடையை நடத்தி வரும் பஞ்சவர்ணம், 79, என்கிற முதியவர், சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அவரது பிடியில் இருந்து வீட்டிற்கு ஓடியுள்ளார்.

பின், சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சிறுமியின் தாய், திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரித்து பஞ்சவர்ணத்தை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

Advertisement